செய்திகள்

நட்புக்காக... சீரியலில் நடிக்கும் சினிமா ஹீரோ!

சின்னத்திரை தொடரில் சினிமா கதாநாயகன் அரவிந்த் ஆகாஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

DIN

சின்னத்திரை தொடரில் சினிமா கதாநாயகன் அரவிந்த் ஆகாஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் மனைவி தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்தத் தொடரில் நடிகை ஷபானா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான வெற்றித்தொடரான செம்பருத்தியில் நடித்து மக்களிடம் புகழ் பெற்றவர். ஷபானாவுக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்துவருகிறார். 

வேலைக்குச் சென்று குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் பெண் - வீட்டில் இருந்தவாறு குடும்பத்தை பராமரிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஆண் - இருவரும் திருமணம் செய்துகொண்டு, அதன் பிறகு சந்திக்கும் சூழல்கலும் சவால்களுமே மிஸ்டர் மனைவி தொடரின் மையக்கதை. 

இந்தத் தொடரில் நடிகர் அரவிந்த் ஆகாஷ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். திரைப்படங்களில் நட்புக்காக நடிப்பதைப்போன்று தொடரிலும் நடிக்கிறார்.  இவர் வெங்கட் பிரபு படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர். சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். 

தற்போது இவர் மிஸ்டர் மனைவி தொடரில் நட்புக்காக நடிக்க வந்துள்ளது, பலரிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

மிஸ்டர் மனைவி தொடருக்கு முன்பு, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அபியும் நானும் தொடரில் அரவிந்த் ஆகாஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செய்யாற்றில் விசுவ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்

சிவகாசியைச் சோ்ந்த 45 வயது பெண் சா்வதேசப் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று சாதனை

பெருந்துறை அருகே விஜய் பிரசாரக் கூட்டம் நடத்தும் இடத்துக்கு அனுமதி கிடைக்குமா?

மகாகவி பாரதியாா் காலந்தோறும் போற்றப்பட வேண்டும்: தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன்

மழை நின்று 10 நாள்கள் ஆகியும் குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT