முகப்பு
செய்திகள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கவின்?

இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் கவினுடன் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:02 AM
பகிர்:

சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். மேலும், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் நாயகனாக கவின் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாமன்னன் வெற்றிக்குப் பின் மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து கபடியை மையமாகக் கொண்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இப்படத்திற்குப் பின் மாரி செல்வராஜ், தனுஷ் படத்தை இயக்குகிறார். தொடர்ந்து, நடிகர் கவினை நாயகனாக வைத்து திரைப்படம் ஒன்றை இயக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →