கோப்புப்படம் 
செய்திகள்

சமந்தாவின் குஷி: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

சமந்தாவின் குஷி திரைப்படம் உள்பட, இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதைப் பார்ப்போம்.

DIN

சமந்தாவின் குஷி திரைப்படம் உள்பட, இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதைப் பார்ப்போம்.

குஷி

ஷிவா நிர்வாணா இயக்கிய இப்படத்தில், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். குஷி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பார்க்கலாம்.

அடியே

திட்டம் இரண்டு படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அடியே. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக கெளரி கிஷன் நடித்துள்ளார்.

மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 29 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிங் ஆஃப் கோதா

நடிகர் துல்கர் சல்மான், அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’கிங் ஆஃப் கோதா’. இப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது. இந்த திரைப்படம் செப்.29ல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

கிக்

சந்தானம் நடிப்பில் வெளியான கிக் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தன்யா ஹோப் நடித்திருந்தார். இப்படம் சிம்ப்ளி செளத் ஓடிடி தளத்தில் செப்.29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹர்காரா திரைப்படம்  சிம்ப்ளி செளத் ஓடிடி தளத்தில் அக்.1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்புகள் தேடிவரும் விருச்சிக ராசிக்கு: தினப்பலன்கள்!

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

SCROLL FOR NEXT