செய்திகள்

மகன்களுடன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா!

தங்கள் குழந்தைகளின் முகத்தை முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர்.

DIN

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள இறைவன் திரைப்படமும் வெளியாகவுள்ளது. மேலும், பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். 

மேலும், குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடாமல் தவிர்த்து வந்தனர். சமீபத்தில் நயன்தாரா இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி அதில், ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘ஹுக்கும்’ பாடல் வரிகளுடன்  ‘நான் வந்துட்டேன்னு சொல்லு..’ எனப் பதிவிட்டு மகன்களான உயிர், உலக் ஆகியோரின் கண்ணாடி அணிந்த முகங்களை அறிமுகப்படுத்தினார். 

இந்நிலையில், குழந்தைகளின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று விக்னேஷ் சிவன் தன் மகன்களின் முகங்களை முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்த பதிவில்,  “என் முகம் கொண்ட உயிர், என் குணம் கொண்ட உலக்... அப்பாவும் அம்மாவும் வாழ்வில் எதையும்விட உங்கள் இருவரையும் மிகவும் நேசிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT