செய்திகள்

பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சித்தார்த்: வைரல் விடியோ!

பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள காட்சிகள் தற்போது வைரலாகியுள்ளது.

DIN

பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள காட்சிகள் தற்போது வைரலாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு உருவாக்கமாக பாக்கியலட்சுமி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. 

இத்தொடர் குடும்ப தலைவிகளை அதிகம் ஈர்த்துள்ளது. மேலும், இளம் தலைமுறையினரும் அதிகம் விரும்பி பார்க்கும் தொடராகவும் உள்ளது. 

கணவரால் ஏமாற்றப்படும் பெண், உழைப்பினால் சுயமாக முன்னேறி எப்படி குடும்பத்தை கவனிக்கிறாள் என்பதை மையமாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாக்கியலட்சுமி தொடரில் நடிகர் சித்தார்த் நடித்துள்ளார். நடிகர் சித்தார்த் நடித்து வெளியகியுள்ள சித்தா பட புரோமோஷனுக்காக இத்தொடரில் அவர் நடித்துள்ளார்.

தற்போது, இத்தொடரில் நடித்துவரும் சுஜித்ரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  சித்தார்த் நடித்துள்ள காட்சிகளை வெளியிட்டுள்ளார். இந்த விடியோ ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT