செய்திகள்

கமல் - வினோத் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

கமல்ஹாசன் நடிக்கும் 233 -வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இந்தியன் - 2க்குப் பிறகு கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. 

இதற்காக, கமல் - வினோத் கூட்டணியில் உருவாகும் கமல் 233 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நெஷனல் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

‘ரைஸ் டூ ரூல்’(rise to rule) என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள காட்சிகள் இது அரசியல் படமென்பதைக் உறுதிசெய்கின்றன. முன்னதாக, விவசாய சங்க நிர்வாகிகளுடன் கமல் மற்றும் வினோத் ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் வெளியானதால் இப்படம் விவசாயிகளின் பிரச்னையைக் கொண்டு உருவாக இருக்கிறது என தகவல் பரவியது.

கமல்ஹாசன் இதற்காக துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  படம் ராணுவ பின்னணியில் உருவாக உள்ளதாக  தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாத துவக்கத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT