செய்திகள்

மீண்டும் சீரியலில் நுழையும் ரம்யா கிருஷ்ணன்!

நடிகை ரம்யா கிருஷ்ணன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கிறார்.

DIN

நடிகை ரம்யா கிருஷ்ணன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கிறார்.

சமீபத்தில், நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இதற்கு முன்னதாக இவர் தங்கம், கலசம், ராஜகுமாரி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில், ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய தொடரான நள தமயந்தி தொடரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அதற்கான முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

நள தமயந்தி தொடரின் முன்னோட்டக் காட்சியில் அம்மன் வேடத்தில் வருகிறார் ரம்யா கிருஷ்ணன். தொடரின் பிரமோஷனுக்காக நடிக்கிறாரா அல்லது சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்பது இனி வரும் நாள்களில் தெரியவரும்.

இத்தொடரின் முன்னோட்டக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இத்தொடர் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இந்தத் தொடரில் பிரியங்கா நல்காரி முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT