முகப்பு
செய்திகள்

மறுவெளியீட்டிற்குத் தயாராகும் அந்நியன்!

அந்நியன் திரைப்படம் 4கே தொழில்நுட்ப தரத்தில் மறுவெளியீட்டிற்குத் தயாராகிக் கொண்டிருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட், 2023 at 6:15 PM
பகிர்:

ஆக்ஸர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

மூன்று தோற்றங்களில் நடித்திருந்த விக்ரம் சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், இத்திரைப்படத்தை 4கே தரத்தில் தொழில்நுட்ப மெறுமேற்றல் செய்து மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.  தீபாவளிக்குப் பின் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.