முகப்பு
செய்திகள்

கார்த்தி - நலன் குமாரசாமி படத்தின் பெயர் இதுவா?

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:10 PM
பகிர்:

நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன்  படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.

அதன்பின், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது கார்த்தியின் 25-வது படமாகும்.

தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். 

இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிகர் சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் ராஜ்கிரணும் நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில்,  இப்படத்திற்கு ‘வா வாத்தியாரே’ என தலைப்பிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →