முகப்பு
செய்திகள்

’லவ் டுடே’ 100-வது நாள் வெற்றிவிழா...

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நடைபெற்றது.

Updated On : 15 பிப்ரவரி 2023, 3:31 pm IST
பகிர்:

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நடைபெற்றது.

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார்.

கடந்த நவ.4 ஆம் தேதி வெளியான இப்படம் அனைத்துத் தரப்பினரிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றது. காதலில் நம்பிக்கை எவ்வளவு முக்கியமானது என்பதைக் கருவாகக் கொண்டு உருவாகியிருந்தது.

Advertisement

Advertisement

முக்கியமாக, ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்ததாகவும் தகவல் வெளியானதோடு ஹிந்தியில் விரைவில் ரீமேக் செய்யபடவும் உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் 100-வது வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா, பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் மோகன் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், ‘ புதுமுக நாயகனை அறிமுகப்படுத்துவது மிகப்பெரிய விசயம். இதைச் செய்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி. கோமாளி படம் முடித்த பிறகும் எனக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. லவ் டுடே 100 நாளில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. பெரிய நடிகரை(ஜெயம்ரவி) இயக்கிவிட்டு நான் நாயகனாக நடிக்கும்போது நண்பர்கள் எச்சரித்தனர். லவ் டுடே மலை போன்றது. பரங்கிமலையில் ஏறுவது சுலபம். ஆனால், எவரெஸ்ட்டில் ஏறுவது கஷ்டம். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிரமத்தை எதிர்கொண்டால் பெரிய மலையில் ஏறிக்கொண்டிருக்கிறீர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள்’ எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.