‘சந்திரமுகி 2’ புதிய புகைப்படம் வெளியீடு
சந்திரமுகி - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சந்திரமுகி - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்கி வருகிறார்.
லைகா புரடக்ஷன் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - தோட்டா தரணி.
இதையும் படிக்க: தனுஷ் படத்தில் ’உறியடி’ விஜய் குமார்
மேலும், நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய புகைப்படங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.