நடிகையை மணக்கும் ஹிருத்திக் ரோஷன்
பாலிவுட்டில் உச்சநடிகராக இருப்பவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். சமீபத்தில் இவர் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட ‘விக்ரம் வேதா’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
பாலிவுட்டில் உச்சநடிகராக இருப்பவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். சமீபத்தில் இவர் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட ‘விக்ரம் வேதா’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஹிருத்திக் ரோஷன் தன் முன்னாள் மனைவியை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது நடிகையும் பாடகியுமான சபா ஆசாத்தை ஹிருந்திக் காதலிப்பதாக கிசுகிசு எழுந்தது.
இந்நிலையில், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஜிகர்தண்டா - 2 படப்பிடிப்பு தீவிரம்!
முன்னதாக, காதலிக்கு ஹிருத்திக் மும்பை கடற்கரையை ஒட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கி பரிசளித்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதனை மறுக்கும் விதமாக ஹிருத்திக் ரோஷன் ‘இது உண்மையில்லை. தவறான தகவல். இதனைப் பகிரவேண்டாம்’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.