முகப்பு
செய்திகள்

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், தபு, க்ரித்தி சனோன் நடிக்கும் படத்தின் அப்டேட்! 

பிரபல ஹிந்தி நடிகைகள் கரீனா கபூர், தபு, க்ரித்தி சனோன் நடிக்கும் தி க்ரூ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Updated On : 2 ஜூலை 2023, 12:37 pm IST
பகிர்:

தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தபு தெலுங்கு, ஹிந்தியிலும் அதிக படங்களில் வந்தார். அவருக்கு 50 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த வயதிலும் தபுவின் அழகு குறையவில்லை என்று அவரது ரசிகர்கள் வியக்கிறார்கள்.

இந்நிலையில் தபு ட்விட்டரில் வைரலாகியுள்ளார். காரணம் என்னவென்றால் தி க்ரூ எனும் திரைப்படத்திற்காக பிரபல பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், தபு, க்ரித்தி சனோன் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தினை இயக்குகிறார் ராஜேஷ் கிருஷ்ணன். 

Advertisement

Advertisement

ஏக்தா கபூர், ரேகா கபூர் இந்தப் படத்தினை தயாரித்துள்ளார்கள். இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி 2024 ஹோலிக்கு வெளியாக உள்ளது. அதாவது மார்ச் 22ஆம் நாள் வெளியாகுமென அறிவிப்பு வந்துள்ளது. 

க்ரித்தி சனோனின் ஆதிபுரூஷ் படம் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அவரது கதாபாத்திரம் பாராட்டப்படது. 

மூன்று அழகிகள் இணைந்து நடிக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் காத்திருப்பதாக இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.