முகப்பு
செய்திகள்

வேட்டையாடு விளையாடு வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

'வேட்டையாடு விளையாடு’ மறுவெளியீடு வெற்றியைப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Updated On : 11 ஜூலை, 2023 at 1:11 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:48 AM

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் மறுவெளியீட்டிலும் வசூலைக் குவித்து வருகிறது.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. காவல்துறை அதிகாரியான ராகவன்(கமல்) சந்திக்கிற கொலை வழக்கும் அதன் பின்னணியும் என திரில்லர் பாணியில் உருவான இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து நவீன மெருகூட்டலுடன்  வேட்டையாடு விளையாடு படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியானது.

Advertisement

சென்னையில் வெளியான திரைகளில் முதல்காட்சியில் ரசிகர்கள் கொண்டாட்டமாக கண்டுகளித்தனர்.

இந்நிலையில், இப்படம் வெளியான திரையரங்குகள் சனி, ஞாயிறுகளில் ஹவுஸ்புல் காட்சிகளால் நிறைந்து வருகிறது. இதனால், மறுவெளியீட்டிலும் கமல்ஹாசன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

மறுவெளியீட்டிலும் இப்படம் வசூலைக் குவித்ததால் இப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.