கமல்ஹாசனுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்
இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவான திரைப்படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார்.
இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியது.
Advertisement
இதையும் படிக்க: ‘அன்றே கணித்த செல்வராகவன்’- வைரலாகும் ரசிகரின் ட்வீட்!
சமீபத்தில், இயக்குநர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனிடம் கதை சொன்னதாகவும் அதில் நடிக்க பிரதீப் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.