சிம்பு படத்தில் கமல்ஹாசன்!
சிம்புவின் புதிய படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:15 PM
சிம்புவின் புதிய படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது
Advertisement
இதையும் படிக்க | ஜவான் வெளியீட்டுத் தேதியில் மாற்றம்..
இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுடன் சிறப்பு தோற்றத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் மிகப்பெரிய பொருள்செலவில் பிரமாண்டமாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.