முகப்பு
செய்திகள்

25 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தி படத்தில் ஜோதிகா

நடிகை ஜோதிகா 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹிந்தி படத்தில் நடிக்கிறார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:57 PM
பகிர்:

நடிகை ஜோதிகா 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹிந்தி படத்தில் நடிக்கிறார். 

பெயரிடப்படாத இந்தப் படத்தில் மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் நடிக்க உள்ளனர். குயின் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விகாஸ் பால் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கிறது. 

அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கிறது. மும்பை, முசோரி மற்றும் லண்டனில் படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை தயாரிப்பாளர்கள் விரைவில் வெளியிட உள்ளனர்.  

கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான ‘டோலி சாஜா கே ரக்னா' என்ற ஹிந்தி படத்தில் ஜோதிகா நடித்திருந்தார். தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.