முகப்பு
செய்திகள்

மாசாய் பழங்குடியினருடன் ‘கிளிமாஞ்சாரோ’ பாடலைப் பாடிய சின்மயி!

கென்யா சென்றுள்ள பாடகி சின்மயி, கிளிமாஞ்சாரோ பாடலை மாசாய் இன மக்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:22 AM
பகிர்:

பாடகி சின்மயி, இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக கென்யாவில் இருக்கிறார். அங்கு, மாசாய் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்குச் சென்றவர், எந்திரன் படத்தில் இடம்பெற்ற ‘கிளிமாஞ்சாரோ’ பாடலை அம்மக்களுடன் இணைந்து பாடியுள்ளார். இந்த விடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் இடம்பெற்ற கிளிமாஞ்சாரோ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பா.விஜய் வரியில், சின்மயி பாடிய இப்பாடல் பழங்குடிகளின் நடனத்தை மையமாகக் கொண்டு உருவானது.

தற்போது, மாசாய் பழங்குடியினருடன் இணைந்து இப்பாடலைப் பாடி மகிழ்ந்துள்ளார் சின்மயி!

முழு கட்டுரையைப் படிக்க →