முகப்பு
செய்திகள்

அமீரைச் சந்தித்த வெற்றிமாறன்.. இதுதான் காரணமா?

இயக்குநர் வெற்றிமாறன், அமீரைச் சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:26 AM
பகிர்:

இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை அமீர் பொய்கணக்குக் கூறி திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா தெரிவித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து, அமீருக்கு இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி  உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், அமீரை இயக்குநர் வெற்றிமாறன் சந்தித்துள்ளார். இதற்குக் காரணம், சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவுள்ள ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடிக்கிறார்.

இதையும் படிக்க: ஓடிடியில் சித்தா!

இதற்காக, இச்சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. வாடிவாசலில் அமீரின் கதாபாத்திரம் வலுவாக இருப்பதால் இதுகுறித்து வெற்றிமாறன் சில தகவல்களை அமீரிடம் பகிர்ந்ததாகவும் தகவல்.

முழு கட்டுரையைப் படிக்க →