முகப்பு
செய்திகள்

பேபி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

‘பேபி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
பகிர்:

இயக்குநர் சாய் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி, விராஜ் அஸ்வின் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘பேபி’. 

காதலியால் ஏமாற்றத்துக்கு உள்ளாகும் நாயகனின் கதையாக உருவான இப்படம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியானது. 

ரூ.7 கோடியில் தயாரான ‘பேபி’  உலகளவில் ரூ.90 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ கைகொடுத்ததுபோல் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ‘பேபி’ பெரிய வரவேற்பைக் கொடுத்திருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →