முகப்பு
செய்திகள்

தாய்லாந்தில் கங்குவா படப்பிடிப்பு?

கங்குவா திரைப்படத்தின்  படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:58 AM
பகிர்:


அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்கிறார்.

இதில் வில்லனாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி(நடராஜ்) நடித்து வருவதாகவும் தகவல்.

படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

தற்போது, இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டிருந்தனர். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த டீசர் இதுவரை யூடியூப்பில் 3.5 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்நிலையில், கங்குவாவின் அடுத்தக்கட்ட படப்படிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →