விடாமுயற்சி அப்டேட்!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. தற்போது, அடுத்தக்கட்ட படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
துணிவு வெளியாகி ஓராண்டைக் கடந்த நிலையில், இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பிலேயே இருப்பதால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
நடிகர் அஜித்தும் படப்பிடிப்புக்கு இடையே இருசக்கர வாகனத்தில் உலகைச் சுற்றக் கிளம்பிவிடுவதால், என்ன நடக்கிறது என்கிற குழப்பமே நீடிக்கிறது.
இந்த நிலையில், இன்று விடாமுயற்சியின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகும் எனத் தகவல் பரவி வருகிறது. இது, விடாமுயற்சியின் டீசர் குறித்ததாக இருக்கலாம் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்!