செய்திகள்

கண்ணீர் ததும்பும் எமோஜிக்களுடன் ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் பதிவில் கண்ணீர் ததும்பும் எமோஜிக்களுடன் நெகிழ்வாக பதிவிட்டுள்ளார்.

DIN

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன.

அர்ஜுன் ரெட்டி புகழ் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘அனிமல்’ படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

ராஷ்மிகா மந்தனா நடிகர்கள் அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய், ரன்பீர் கப்பூர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது ராஷ்மிகாவின் 28வது பிறந்த நாளை முன்னிட்டு திரை பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீ வள்ளி (புஷ்பா 2) கதாபாத்திர போஸ்டர்!

இந்த அபார வரவேற்புக்கு நடிகை ராஷ்மிகா மிகவும் நெகிழ்ச்சியடைந்து, “உங்களது அனைத்து ட்வீட்டுகளையும் பார்க்கிறேன். அனவருக்கும் பதிலளிக்க ஆசைப்படுகிறேன்.(கண்ணீர் ததும்பும் எமோஜிக்களுடன் இதயம் எமோஜி). எனக்காக நீங்கள் செய்த டிரெண்டிங், சிடிபி (பொதுவான முகப்பு படங்கள்), படத்தொகுப்புகள், சிறிய பதிவுகள் என அனைத்துக்கும் எனது அன்பு. அனைவரையும் நேசிக்கிறேன்!

நீங்கள்தான் சிறந்தவர்கள்!!! ஆறத்தழுவிக் கொள்கிறேன்!” என நெகிழ்வாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும் ரசிகர்கள் சிலரின் படத்தொகுப்புகளையும் பகிர்ந்து நன்றியை தெரிவித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT