சண்முக பாண்டியனின் படை தலைவன் சிறப்பு விடியோ!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘படை தலைவன்’ படத்தின் சிறப்பு விடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மூத்த மகன் சண்முக பாண்டியன் ’சகாப்தம்’ படத்தின் மூலம் நாயகனாக சினிமாவில் அறிமுகமானார். பின், மதுர வீரன் என்கிற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது, இயக்குநர் அன்பு இயக்கத்தில் உருவாகும் ‘படை தலைவன்’ படத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
இந்த நிலையில், சண்முக பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படைதலைவன் படத்தின் விடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.