செய்திகள்

புஷ்பா 2 டீசருக்கு காத்திருக்கும் கிரிக்கெட் வீரர்கள்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா 2 படத்தின் டீசருக்காக காத்திருக்கும் கிரிக்கெட் வீரர்கள்.

DIN


இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் அதிர்ந்தது.

தற்போது, புஷ்பா - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் டீசரை வருகிற ஏப்.8 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புஷ்பா - 2 ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஆஸி. கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் படத்தின் டீசர் அப்ட்டேடினை இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக டேவிட் வார்னர் புஷ்பா பட மாதிரி நடனம், பாவனை செய்து அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய ரசிகர்கள் வார்னருக்கு அல்லு அர்ஜுன் பட விடியோக்களை எடிட் செய்தும் சமூக வலைதளங்களில் அன்பைப் பகிர்வதும் அடிக்கடி நடக்கும்.

வார்னர் தற்போது ஐபிஎல் தொடரில் தில்லி அணியில் விளையாடிவருகிறார். சுரேஷ் ரெய்னா வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT