மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடியில் எப்போது?
மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளம், தமிழகம் என வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.
உலகளவில் ரூ.225 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இரண்டு நாள்களில் ரூ.4 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்.
இந்த நிலையில், இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது.