சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வெளியான அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அடுத்ததாக, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அமரன் எனப் பெயரிட்டுள்ளது.
அமரன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
Advertisement
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்து அவரின் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு விடியோவொன்றை வெளியிட்டுள்ளது. அதில், கோயில், பள்ளிக்கூடம் சம்பந்தமான காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
மேலும், சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தின் முதல் பார்வை டீசர் நாளை(ஏப். 11) வெளியாகும் என்று சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.