முகப்பு
செய்திகள்

விஜய் குரலில் வெளியானது 'விசில் போடு' பாடல்!

கோட் படத்தின் 'விசில் போடு' பாடல் விஜய் குரலில் வெளியானது.

Updated On : 14 ஏப்ரல், 2024 at 12:46 PM
பகிர்:

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது. இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் மதன் கார்க்கி வரிகளில் நடிகர் விஜய் பாடிய 'விசில் போடு' பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.