செய்திகள்

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

நடிகர் அஜித்குமார் வாக்களித்துவிட்டு கிளம்பும்போது அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

DIN

தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமன்றி முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று( ஏப். 19) நடைபெறும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நடிகர் அஜித்குமார் திருவான்மியூரில் மாநகராட்சிப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு 6.45 மணிக்கே வருகை தந்தார்.

சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடன், நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்தார்.

வாக்களித்தப் பிறகு நடிகர் அஜித் காரில் சென்று ஏறும்போது அவரது ரசிகர்கள், “தல தல அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல... ” என முழக்கமிட்டனர்.

மே.1ஆம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாள் வருகிறது. இதனையொட்டி அவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மங்காத்தா படம் மறுவெளியீடாகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை.. மத்திய பட்ஜெட்டில் கவனம் பெற்ற தமிழக பகுதிகள்!

2.2.1976: த.நா. முழுதும் கூட்டங்களுக்கு தடை

பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளுப்படியாக ஒன்றுமில்லை: திருச்சி சிவா

SCROLL FOR NEXT