செய்திகள்

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

நடிகர் மோகன்லாலுடன் நடிகை ஷோபனா 56வது முறையாக இணைந்து நடிக்கவிருக்கிறார்.

DIN

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன் லால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான  நேரு திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.

இதற்கடுத்து வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

மோகன்லாலின் 360வது படத்தை 'சவுதி வெள்ளக்கா' பட இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். 'ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர்.

இப்படத்திற்கு தற்காலிகமாக எல்360 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார்.

இந்நிலையில், நடிகை ஷோபனா தனது இன்ஸ்டாகிராமில் விடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில், “நான் பல வருடங்களுக்குப் பிறகு மலையாளப் படம் ஒன்றில் நடிக்கிறேன். இதை தருண் மூர்த்தி இயக்குகிறார். ஆமாம் நீங்கள் எதிர்பார்ப்பதுதான். மோகன்லாலின் 360வது படத்தில் நடிக்கிறேன். மோகன்லாலுக்கு வாழ்த்துகள். இது நாங்கள் ஒன்றாக இணைந்து நடிக்கும் 56வது படம். அதனால் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். உங்களுக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

1985இல் முதன்முதலாக மோகன்லால்- ஷோபனா இணைந்து அவிடத்தி போலே இவிடேயும் என்ற படத்தில் நடித்தார்கள். கடைசியாக 2004இல் மாம்பழக்காலம் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேகமோ அவள்... பிரியங்கா மோகன்!

பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக உயர்வுடன் நிறைவு!

ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் நின்றபடி விடியோ எடுத்த சிறார்கள் வந்தே பாரத் ரயில் மோதி பலி!

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!

SCROLL FOR NEXT