செய்திகள்

ரஜினி - 171 பட டீசர் அறிவிப்பு!

ரஜினியின் 171 படத்தின் டீசர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் வெற்றிப்படமானது.

முன்னதாக, ஏப்.22ஆம் தேதி ‘ரஜினி 171’ பெயர் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு ரஜினி 171 படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இப்படத்திற்கு ‘கழுகு’ எனப் பெயரிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வைரலாகின.

ரஜினிக்கு வில்லனாக நடிகர் மைக் மோகன் நடிக்கவுள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி

தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழப்பு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு வலுவான பதிலடி- மத்திய அமைச்சா் அமித் ஷா

செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா: அமைச்சா் ராஜேந்திரன்

தமிழகத்தில் 35,000 விநாயகா் சிலைகள் அமைப்பு: பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

SCROLL FOR NEXT