செய்திகள்

வெளியானது ரஜினி - 171 டீசர்: படத் தலைப்பு அறிவிப்பு!

ரஜினியின் 171-வது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

DIN

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

மேலும், இப்படத்தில் நாகார்ஜுனா, ரன்வீர் சிங், சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் நடிகை ஷோபனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினியின் 171-வது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், படத்தின் பெயர் 'கூலி' என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரஜினிக்கு வில்லனாக நடிகர் மைக் மோகன் நடிக்கவுள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு!

நித்ய கன்னி... மனு பாக்கர்!

பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருநங்கை கழுத்தறுத்து கொலை!

கூமாபட்டி பிளவக்கல் அணையை மேம்படுத்த ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு!

ஐந்தரை அடியில் 2001 வெள்ளி நாணயங்கள் பதிக்கப்பட்ட விநாயகர் சிலை!

SCROLL FOR NEXT