செய்திகள்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் தொடர் வெள்ளித் திரையில் நடிகை திவ்யா துரைசாமிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சிறகடிக்க ஆசை தொடர் விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. இத்தொடர் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில், பிரதான வேடத்தில் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா நடிக்கிறார்கள். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரை இயக்கிய எஸ்.குமரன் இந்தத் தொடரை இயக்குகிறார்.

நடிகர் ஸ்ரீதேவா

இந்த நிலையில், இத்தொடரில் மனோஜ் பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஸ்ரீதேவா, தமிழ் சினிமாவில் நடிகை திவ்யா துரைசாமிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, நடிகர் ஸ்ரீதேவா படப்பிடிப்பு தளத்தில் எடுத்த சில புகைப்படங்களை தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டுயிருந்தார். இவர் துணிவு படத்தில் சிறுவேடத்தில் நடித்திருந்தார். ஆதலினால் காதல் செய்வீர் என்ற வெப் தொடரிலும் இவர் நடித்திருந்தார்.

திவ்யா துரைசாமி.

இவர், தற்போது வெள்ளித்திரையில் நாயகனாக நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை திவ்யா துரைசாமி குற்றமே குற்றம், புளூ ஸ்டார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT