செய்திகள்

‘ஹீராமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள ஹீராமண்டி இணையத்தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள் கலந்துகொண்டனர்.

DIN

ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. சரித்திர படங்கள் எடுப்பதிலும் காதல் படங்கள் எடுப்பதிலும் கவனம் பெறுகிறார்.

இறுதியாக இவர் இயக்கிய கங்குபாய் கதியவாடி திரைப்படத்துக்கு ஆலியா பட்டிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. மேலும் சிறந்த ஒப்பனை, சிறந்த எடிட்டிங், சிறந்த வசனம், சிறந்த தழுவலுக்கான திரைக்கதை ஆகிய பிரிவுகளில் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

சஞ்சய் லீலா பன்சாலி முதன்முதலாக இணையத் தொடர் ஒன்றினை இயக்கியுள்ளார். நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுமென முன்பே கூறப்பட்டது.

இந்தத் தொடருக்கு ஹீராமண்டி எனப் பெயடிரப்பட்டுள்ளது. இதில் சோனாக்‌ஷி சின்கா, அதிதி ராய் ஹைதரி, மனிஷா கொய்ராலா, ஷர்மின் சேகல் உள்பட பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் புதன்கிழமை இரவு இந்தத் தொடரின் சிறப்புக் காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதில் பிரபலங்களான சல்மான் கான், ஆலியா பட், ராஷ்மிகா மந்தனா, அதிதி, சித்தார்த், விக்கி கௌஷல், ரேகா, சோனாக்‌ஷி சின்கா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்ததொடர் சிறப்பாக உள்ளதாக பார்த்தவர்கள் கூறிவருகிறார்கள்.

இந்தத் தொடர் வரும் மே.1ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT