செய்திகள்

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

நடிகை தமன்னா நடித்துவரும் புதிய படத்தின் அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

DIN

விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா. ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.

தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் அவரது பப்ளி பவுன்சர், லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது.

தமிழில் 'அரண்மனை 4' படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் 2 ஹிந்திப் படங்கள், ஒரு தெலுங்குப் படமான ‘ஒடேலா 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியாகி கனவம் பெற்றது. முதல் முறையாக தமன்னா இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஒடேலா முதல் பாகம் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகிய த்ரில்லர் படம் ஆஹா ஓடிடியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. அசோக் தேஜா இயக்குகிறார்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு வெளியான போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் சிவ சக்தியாக தமன்னா எப்படி மாறினார் என்ற அறிமுக விடியோ வெளியாகியுள்ளது. 2-ஆவது கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக படக்குழு விடியோவில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

Hollywoodஐக் கலக்கிய புதுவை Director! M Night Shyamalan! | Dinamani Talkies | Sixth Sense | Split

இது ஞாயிறு மனநிலை.. அங்கனா ராய்!

தென்காசி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT