செய்திகள்

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

நடிகர் கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் டிரைலர் வெளியாகியது.

DIN

சின்னத்திரை தொடரான சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

இதனைத் தொடர்ந்து டாடா படத்தின் மூலம் சினிமாவில் கவின் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக அதிதி எஸ். போஹன்கர் நடிக்கவுள்ளதாக படக்குழு விடியோ வெளியீட்டுத் தெரிவித்தது.

ஸ்டார் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், நடிகர் கவின் தன் டப்பிங் பணிகளை முடித்ததாக முன்னதாக அறிவித்திருந்தார்.

ஸ்டார் படம் வரும் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT