செய்திகள்

கோட்: 3-ஆவது பாடல் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் 3ஆவது பாடல் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

முன்னதாக, விசில் போடு மற்றும் சின்னச் சின்ன கண்கள் ஆகிய இரண்டு பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 3ஆவது பாடல் ஆக.3ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தப் பாடல் குறித்து நாளை (ஆக.2) புதிய அப்டேட் வெளியாகுமெனவும் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் யுவன், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தொல்லை தாங்கவில்லை என்று கிண்டல் செய்து நேற்று (ஜூலை 31) பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் அடுத்த படத்தோடு சினிமாவில் இருந்து விலகுகிறார். அரசியலில் களமிறங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமளிக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா!

டி20 தரவரிசை: அதிரடி நாயகன் டெவால்டு பிரேவிஸ் 89 இடங்கள் முன்னேற்றம்!

கேரள நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

குவாஹாட்டி உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

நாய்கள் முக்கியமா? குழந்தைகள் முக்கியமா? ஜி.பி. முத்துவுக்கு நடிகை பதிலடி!

SCROLL FOR NEXT