முகப்பு
செய்திகள்

சர்தார் 2 படத்தில் மாளவிகா..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

பி.எஸ். மித்ரன் இயக்கும் சர்தார் 2 திரைப்படத்தில் மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவிப்பு.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 12:35 PM
மாளவிகா மோகனன்.
பகிர்:

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான் சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது சர்தார் 2 திரைப்படம் உருவாகிறது. இதன், படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில், நடிகர் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகைகள் பிரியங்கா மோகன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் படத்தில் இணைந்துள்ளதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமானவர்.

தற்போது பா. ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆக.15ஆம் நாள் வெளியாகவுள்ளது.

பிரின்ஸ் ஃபிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.