செய்திகள்

கலைத்தாயின் இளைய மகன்... இயக்குநரைப் பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா!

DIN

வீர தீர சூரன் படத்தின் இயக்குநர் சு.அருண்குமாரை எஸ்.ஜே.சூர்யா பாராட்டியுள்ளார்.

சித்தா படத்தின் இயக்குநர் சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வீர தீர சூரன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வேகமாக நடைபெற்று வருகிறது.

வீர தீர சூரன் படப்பிடிப்பில்..

இந்த நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா தன் எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில், “மதுரையில் நேற்றிரவு வீர தீர சூரனில் எனக்கும் நடிகர்கள் விக்ரம் மற்றும் சுராஜுக்கும் இடையேயான கிளைமேக்ஸ்க்கு முந்தைய காட்சியை இயக்குநர் அருண்குமார் அபாரமாக எடுத்தார். இந்தக் காட்சியை எடுப்பதற்கு முன் இயக்குநர் தன் உதவி இயக்குநர்கள் மற்றும் குழுவினருடன் படப்பிடிப்பு தளத்தில் கடந்த 10 நாள்களாக ஒத்திகை பார்த்து வந்தார்.

எல்லாம் சரியானபோது எங்களை வரவழைத்தார். நாங்கள் 3 இரவுகள் ஒத்திகை பார்த்து நேற்று அதிகாலை 5.05 மணிக்கு நடித்து முடித்தோம். இயக்குநர் அருண்குமாரிடம் ஒன்றைச் சொல்ல வேண்டும். கலைத்தாயின் இளைய மகன் அய்யா நீர் (நீங்கள்)” எனப் பாராட்டியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவின் இப்பதிவு வைரலாகியுதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

அரியலூா் ரயில்வே கேட் அருகே இளைஞா் சடலம்

SCROLL FOR NEXT