நடிகைகள் பார்வதி, ஊர்வசி நடிப்பில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் கவனம் பெற்றுள்ளது.
மலையாள நடிகை பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமானார். பின், தனுஷுடன் மரியான் படத்தில் நடித்திருந்தார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை பார்வதிக்கு 'டேக் ஆஃப்' மலையாளப் படத்துக்கு தேசிய விருதும் கேரள அரசின் மாநில விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது, நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். பா. இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படம் ஆக.15 வெளியாகவுள்ளது.
இதற்கிடையே, பார்வதி மற்றும் ஊர்வசி நடிப்பில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றிருந்தது. ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.4.5 கோடி வரை வசூலித்தது.
இந்த நிலையில், ஆக.1 ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் பார்த்த பலரும் பார்வதி மற்றும் ஊர்வசியின் நடிப்பையும் படத்தின் கதைக் கருவை பாராட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.