மஞ்சு வாரியர்  
செய்திகள்

லேடி சூப்பர் ஸ்டாரா..? அவமானமாக இருக்கிறது: மஞ்சு வாரியர்

DIN

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைப்பது அவமானமாக இருப்பதாக மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

1995-ல் மலையாளத்தில் நடிகையாகஅறிமுகமானவர் மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை 1998இல் திருமணம் செய்தவர் அவரை 2015இல் விவகாரத்து செய்யும்வரை திரைடங்களில் நடிக்காமல் இருந்தார்.

2015க்குப் பிறகு மீண்டும் நடிக்க துவங்கியிருக்கும் மஞ்சு வாரியருக்கு பிருத்விராஜுன் லூசிஃபர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.

தமிழில் அசுரன் படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து அஜித்துடன் துணிவு படத்தில் நடித்தார். தற்போது, வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மனைவியாக நடித்து முடித்துள்ளார். விடுதலை - 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஃபுட்டேஜ் போஸ்டர்

இதற்கிடையே, மலையாளத்தில் அவர் நடிப்பில் உருவாகும் ஃபுட்டேஜ் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மஞ்சு வாரியர், “என்னை சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைப்பதால் சமூக வலைதளங்களில் தேவையற்ற விவாதங்கள் எழுகின்றன. தனிப்பட்ட முறையில் இது எனக்கு அவமானமாக இருக்கிறது. இந்தப் பட்டத்திற்கு பலரும் தங்களுக்கான வரையறையை வைத்திருக்கின்றனர். உண்மையில் எனக்கு எந்த பட்டமும் தேவையில்லை. ரசிகர்களின் அன்பு ஒன்றே போதுமானது.” எனக் கூறியுள்ளார்.

மஞ்சு வாரியர்

தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா அவரது படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துடனே நடிப்பதும் அதே பட்டத்தை வைத்து விளம்பரங்களைக் கொடுப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT