எதிர்நீச்சல் தொடரில் கரிகாலன் பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் விமல், புதிய வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.
சன் தொலைக்காட்சியில் சொக்கத்தங்கம் என்ற புதிய தொடரில் நடிகர் விமல் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனிடையே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரிலும் நடிகர் விமல் நடிக்கவுள்ளார். இத்தொடரில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவர் நடிக்கவுள்ளார்.
எதிர்நீச்சல் தொடரில் ஆதிரையின் கணவராக, கலாட்டா செய்து பலரை சிரிக்க வைத்த கரிகாலன், கார்த்திகை தீபம் தொடரிலும், வில்லியாக உள்ள ரம்யாவின் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ரம்யாவின் கணவராகவும், அவரின் வில்லத்தனங்களுக்கு பதிலடி கொடுக்கும் நைய்யாண்டி நிறைந்த பாத்திரத்திலும் விமல் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை தீபம் தொடரில் ரம்யா பாத்திரத்தில் நடிகை நந்திதா ஜெனிஃபர் நடித்து வருகிறார். இவர் பாரதிராஜாவின் ஈரநிலம் படத்தில் நாயகியாக நடித்தவர்.
சன் தொலைக்காட்சியின் நாகவல்லி, லக்ஷ்மி ஸ்டோர்ஸ், அம்மன், விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி ஆகிய தொடர்களிலும் நந்திதா நடித்துள்ளார்.
கார்த்திகை தீபம் தொடரில் பலரின் வெறுப்புகளை சம்பாதித்த வில்லியாக நடித்து வருகிறார். அவருக்கு விமல் ஜோடியாவது பொருத்தமான தேர்வு என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
கார்த்திகை தீபம் தொடரில் விமல் நடிப்பது உறுதியானாலும், அவரின் பாத்திரம் இதுவரை உறுதியாகவில்லை. கார்த்திகை தீபம் குழு தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.