முகப்பு
செய்திகள்

விரைவில் முடிகிறது இந்திரா தொடர்!

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை மையப்படுத்தியது இந்திரா கதை.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 11:19 AM
இந்திரா போஸ்டர்
பகிர்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இந்திரா தொடர் விரைவில் முடிவடையவுள்ளது.

2022ஆம் ஆண்டு நவம்பர் முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

பகல் வேலையில் குறிப்பிட்ட நேரங்களில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இந்திரா. மதிய நேரங்களில் ஒளிபரப்பாகிவரும் ஜீ தமிழ் தொடர்களில் நல்ல டிஆர்பி பெற்று வரும் தொடராக இந்திரா உள்ளது.

இத்தொடரில் ஃபெளசில் ஹிதயாத் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அக்‌ஷய் கமல் நடித்து வருகிறார்.

இந்திரா - காவியா என்ற நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை மையப்படுத்தியது இந்திரா கதை. காவியாவின் திருமணத்துக்கு பிறகு அவரின் மாமியார் ஜெயலட்சுமி வரதட்சிணை கேட்கிறார். அதற்கு எதிராக நிற்கிறார் இந்திரா. எதிர்பாராத விதமாக ஜெயலட்சுமியின் கடைசி மகனை திருமணம் செய்துகொள்கிறார் இந்திரா. இதற்கு நடுவே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற இந்திராவின் கனவு பலித்ததா என்பதே இத்தொடரின் திரைக்கதை.

தொடரில் இந்திரா / காவியா

அண்மையில் இந்தத் தொடரில் இந்திராவின் அக்காவாக காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜீவி டிம்பிள் என்பவர் மாற்றப்பட்டார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக வேறொருவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில், இந்திரா தொடர் இறுதி அத்தியாத்தை எட்டியுள்ளதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இறுதிக்காட்சிகள் அடுத்த வாரம் முழுக்க ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →