சாந்தினி பிரகாஷ் இன்ஸ்டாகிராம்
செய்திகள்

கார்த்திகை தீபத்தில் நடிக்கும் வானத்தைப் போல தொடர் நடிகை!

வானத்தைப் போல தொடரில் நடித்துவரும் சாந்தினி பிரகாஷ், கார்த்திகை தீபம் தொடரில் நடிக்கவுள்ளார்.

DIN

வானத்தைப் போல தொடரில் நடித்துவரும் பிரபல நடிகையான சாந்தினி பிரகாஷ், கார்த்திகை தீபம் தொடரில் நடிக்கவுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 8.30 மணிக்கு வானத்தைப் போல தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுவரும் இந்தத் தொடரில், அண்ணனாக நடிக்கும் ஸ்ரீ குமாருக்கு ஜோடியாக சாந்தினி பிரகாஷ் நடித்து வருகிறார்.

இத்தொடரில் காதலனை திருமணம் செய்ய முடியாமல் விருப்பத்துக்கு மாறாக ஸ்ரீகுமாரை திருமணம் செய்துகொண்டு அவர் அரங்கேற்றும் நாடகங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இவரின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டுள்ளது.

தொடரில் காதலருடன் - கணவருடன் - சாந்தினி பிரகாஷ்

இவர் தற்போது ஜூ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

பலதரப்பட்ட திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிக டிஆர்பி பெறும் தொடர்களில் ஒன்றாக உள்ளது. இந்தத் தொடரில் முக்கியமான பாத்திரத்தில் நடிகை சாந்தினி பிரகாஷ் நடிக்கவுள்ளார்.

சாந்தினி பிரகாஷ்

இதனால் அவரின் ரசிகர்கள் கார்த்திகை தீபம் தொடரில் அவரின் பாத்திரம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மேலும், வானத்தைப் போல தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், அவர் கார்த்திகை தீபம் தொடருக்குச் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் வானத்தைப் போல தொடர் முடியும் தேதி குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னாா்குடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

திருக்குறுங்குடி நம்பியாற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு: மறுகரையில் சிக்கித் தவித்த 13 போ் மீட்பு

அரசு மருத்துவமனையில் ரூ.2.10 கோடி மதிப்பில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

கொடைக்கானலில் 4 நாள்களுக்குப் பிறகு சுற்றுலா தலங்களைப் பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்

மக்கள் கண்காணிப்பு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT