3 கான்களையும் ஒரே படத்தில் இயக்க கங்கனா ரணாவத் விருப்பம்!
பாலிவுட்டில் ஷாருக், ஆமிர், சல்மான் என மூவரையும் ஒரே படத்தில் இயக்க ஆவலுடன் இருப்பதாக கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
ஷாருக், ஆமிர், சல்மான் என மூவரையும் தனது தயாரிப்பு, இயக்கத்தில் நடிக்க வைக்க கங்கனா ரணாவத் விருப்பம் தெரிவித்துள்ளார்.
2006-ஆம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யபின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனா ரனாவத் 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
2019இல் ‘மணிகர்னிகா- ஜான்சி ராணி’ படத்தினை கிறிஸ் ஜகர்லாமுடி உடன் இணைந்து இயக்கியுள்ளார். தற்போது எமர்ஜென்சி படத்தினை முழுக்க முழுக்க அவரே இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளப் படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத், அவரே இந்தப் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்.
ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் கங்கனா வெற்றிபெற்று எம்.பியான பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதாலும், இதற்கு முன்னர் நடித்தத் திரைப்படங்களின் தொடர் தோல்விகளாலும் இந்தப் படம் வெற்றியடையப் பெரிதும் நம்பிக்கையுடன் இருக்கிறார் கங்கனா ரணாவத்.
எமர்ஜென்சி திரைப்படம் செப்.6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியதாவது:
ஷாருக், ஆமிர், சல்மான் என மூவரையும் தனது தயாரிப்பு, இயக்கத்தில் நடிக்க வைக்க மிகுந்த விருப்பம் உள்ளது. நன்றாக நடிக்கவும் அவர்களை அழகாக திரையில் காண்பிக்கவும் ஆசை. அவர்களால் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துடன் ஒன்ற முடியும். அதனால் அவர்களால் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்க முடியும்.
அவர்கள் திறமைசாலிகள் மட்டுமல்ல அவர்களால் ஹிந்தி சினிமாவுக்கு வருமானமும் கிடைக்கின்றன. அதற்கு அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.
நான் பல நடிகர்களுடன் வேலை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த இர்ஃபான் கானை இயக்க முடியாமல் போனது வருத்தம்தான். அவரை எப்போதும் நான் மிஸ் செய்கிறேன் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.