நடிகை கீர்த்தி சுரேஷ். 
செய்திகள்

பாண்டிய நாட்டிலிருந்து உங்கள் கயல்விழி பாண்டியன்! கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த விடியோ!

ரகு தாத்தா திரைப்படத்தின் புரமோஷனுக்காக மதுரை சென்ற விடியோவை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

DIN

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்த மாமன்னன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரகு தாத்தா'. பிரபல எழுத்தாளர் சுமன் குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒய். யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

ரகு தாத்தா திரைப்படம் சுதந்திர நாளான ஆக. 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இதற்கான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுவரும் கீர்த்தி சுரேஷ் தனியாளாக வேலை செய்து வருகிறார்.

இதன் ஒரு பாகமாக மதுரையில் சென்று புரமோஷன் செய்துள்ளார். அதன் விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, “பாண்டிய நாட்டிலிருந்து உங்கள் கயல்விழி பாண்டியன்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்

187 மாணவா்களுக்கு ரூ.13.56 கோடி கல்விக் கடனுக்கு பரிந்துரை

SCROLL FOR NEXT