ராயன் போஸ்டர் 
செய்திகள்

ராயன்: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடித்த ராயன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக உலகளவில் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம், சில சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. தனுஷ் நடித்த படங்களிலேயே இதுவே பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியுள்ளது.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ் பத்திரிகையாளர்களுக்கு விருந்தளித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் ஆக.23ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ் சிறப்பாக நடித்திருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாதெமியின் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் தேர்வாகியுள்ளதென தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT