முகப்பு
செய்திகள்

டிமான்ட்டி காலனி - 2 வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 12:59 PM
பகிர்:

டிமான்ட்டி காலனி - 2 திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது.

ஒருசில கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎஃப்எக்ஸ் என ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்றாம் பாகத்திற்கான குறிப்போடு முடிவதால், அடுத்த பாகம் உருவாகும் எனத் தெரிகிறது.

மேலும், இப்படத்திற்கு கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதால், படக்குழுவினர் இந்த வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.