நடிகர்கள் அஜித், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்ட படக்குழு. 
செய்திகள்

தொடர்ந்து விடாமுயற்சி அறிவிப்புகள்... என்ன காரணம்?

DIN

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகின்றன.

விடாமுயற்சி படத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா ஆகியோர் நடித்து வருகின்றனர். நடிகர் அஜித்குமார் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஜோனாதன் மோஸ்டோ இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அதிரடி திரில்லர் திரைப்படமான 'பிரேக்டவுன்' படத்தின் தழுவலாக விடாமுயற்சி திரைப்படம் இருக்கலாம் என்ற தகவலும் முதலில் வெளியாகின.

அதை உறுதி செய்யும் வகையில் கார் துரத்தல் காட்சிகள் உள்ளிட்டவை விடாமுயற்சி படத்திலும் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்‌ஷன் நிறுவனம் தொடர்ந்து ஒவ்வொரு கதாபாத்திர அறிமுகத்துக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. நடிகர் அஜித் போன்ற நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு பெரிய விளம்பரங்கள் இருந்தாலும் சிறிய கதாபாத்திரங்களுக்கென தனியான போஸ்டர்கள் வெளியாகாது.

ஆனால், விடாமுயற்சி படக்குழு படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கான போஸ்டர்களை வெளியிடுவதுபோல் அடிக்கடி போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். இன்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியாகின.

படத்தின் உருவாக்கம் சாதாரண கமர்சியல் படமாக மட்டுமில்லாமல் அதிரடியான சண்டைக்காட்சிகளாலும் நிறைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்த தயாரிப்பு நிறுவனம் இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT