யுவராஜ் சிங்  படம் | யுவராஜ் சிங் (எக்ஸ்)
செய்திகள்

யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது - விரைவில் படப்பிடிப்பு!

யுவராஜ் சிங் ஒரே ஓவரில் பறக்கவிட்ட 6 சிக்ஸர்களை திரையில் காண ரசிகர்களுக்கு வாய்ப்பு...

DIN

யுவராஜ் சிங் கதாபாத்திரம் ஏற்கப்போவது யார்? என்ற கேள்விதான் இப்போது சமூக வலைதளங்களில் பார்வையாளர்கள் பலரின் சந்தேகமாக எழுந்துள்ளது.

ஆம்... யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று(ஆக. 20) காலை வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2 உலகக் கோப்பைகளைப் பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனியை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக ஜொலித்த யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறும், விரைவில் திரைப்படமாக்கப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டி-சீரிஸ் நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கதில் வெளியிட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் யுவராஜ் சிங் கதாபாத்திரம் ஏற்று நடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட ‘எம். எஸ். தோனி - தி அண்டோல்டு ஸ்டோரி’ கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இத்திரைப்படத்தில் யுவராஜ் சிங்கின் கதாபாத்திரம் குறுகிய கால அவகாசமே இடம்பெற்றிருந்தாலும், அவரது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து, சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம், ‘எம். எஸ். தோனி - தி அண்டோல்டு ஸ்டோரி’ அளவுக்கு ரசிகர்களைக் கவர்ந்திழுக்க தவறிவிட்டது. எனினும், சச்சினை குறித்து பலரும் அறிந்திடாத பல தகவல்களை இத்திரைப்படம் பார்வையாளர்களுக்கு வழங்கியிருந்தைதை மறுக்க முடியாது.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து, இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முதுகெலும்பாக விளங்கியவர் யுவராஜ் சிங். கிரிக்கெட் விளையாட்டில் முன்னணி பேட்ஸ்மேன் ஆகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் வலம் வந்த யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அதன்பின் தீவிர சிகிச்சை எடுத்து மீண்டு வந்துள்ளார். இதன் காரணமாக கிரிக்கெட் மட்டுமன்றி பிற விளையாட்டு வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் யுவராஜ் சிங் மீது தனி அபிமானம் எப்போதுமே உண்டு.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ள யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் திரைப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT